Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இன்ஸ்டாகிராமில் தவறு கண்டுபிடித்தவருக்கு ரூ.38 லட்சம் பரிசளித்த மெட்டா ! சுவாரஸ்ய சம்பவம்

    இன்ஸ்டாகிராமில் தவறு கண்டுபிடித்தவருக்கு ரூ.38 லட்சம் பரிசளித்த மெட்டா ! சுவாரஸ்ய சம்பவம்

    இன்ஸ்டாகிராம் தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள பிழையை கண்டறிந்த இளைஞர் 38 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றுள்ளார். 

    சமூக வலைதளங்களை பொறுத்தவரையில் இன்ஸ்டாகிராம்  தளமானது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த இன்ஸ்டாகிராம் செயலியானது இளைஞர்கள் மத்தியில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், இந்த இன்ஸ்டாகிராம் தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள பிழையை கண்டறிந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் பகுதியைச் சேர்ந்தவர்தான், நீரஜ் ஷர்மா. இவருக்கு வயது 20. 

    இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளை கண்டறிய இவர் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சியின் பலனாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியின் கவர் போட்டோ மற்றும் thumbnail பகுதியில் சில மாற்றங்களை மேற்கொள்ளும்போது பிழைகள் ஏற்படுவதை இவர் கண்டறிந்துள்ளார். 

    இதனை பல்வேறு மறுசோதனைகளுக்கு பிறகு மெட்டா நிறுவனத்திற்கு நீரஜ் அனுப்பியுள்ளார். இதற்கு மூன்று நாட்கள் கழித்து பதில் கூறிய மெட்டா, பிழையை மீண்டும் டெமோ செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்ற நீரஜ் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, கடந்த மே 11-ம் தேதி அன்று இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்ததற்காக 45,000 டாலர்களை (35 இலட்சத்தை) பரிசாக மெட்டா அறிவித்தது. இந்த பரிசுத் தொகையில் தாமதம் நிகழவே மேலும் 4,500 டாலர் பரிசையும் சேர்த்தே மெட்டா கொடுத்தது . மொத்தத்தில், நீரஜ் ஷர்மா 38 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....