Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு4 நாள் பயணமாக விமானத்தில் துபாய் பரந்த அரசு பள்ளி மாணவர்கள்..! அன்பில் மகேஷ் கொடுத்த...

    4 நாள் பயணமாக விமானத்தில் துபாய் பரந்த அரசு பள்ளி மாணவர்கள்..! அன்பில் மகேஷ் கொடுத்த உறுதிமொழி

    அரசு பள்ளி மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துபாய்க்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். 

    தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இணைய வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 67 மாணவ மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை ஏர் இந்தியா விமானம் மூலமாக துபாய்க்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். 

    ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவுக்கும் இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

    இதற்கு முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 

    நான் இந்த 67 மாணவ-மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருப்பேன். 5 ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை மற்றும் வெளியுறவுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் வருகின்றனர். துபாய் செல்வது மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

    மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவித்து அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றுலாவிற்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இது சி.எஸ்.ஆர் நடவடிக்கையின் மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா.

    school students

    10% இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஒரு குழு அமைத்துள்ளார்.

    புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.

    முதலமைச்சர் பிரதமரை முதல் முறையாக சந்தித்தபோதே தமிழகத்திற்கு நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

    தமிழக மாணவர்களுக்கு எந்த கல்வி முறை வேண்டும் என்பதை ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார். இந்த 4 நாட்கள் கல்வி சுற்றுலாவில் நான் தான் இந்த மாணவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க போகிறேன். 

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார். 

    இதையும் படிங்ககார் வெடிப்பு சம்பவம்: கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை..! 45 இடங்களில் அதிகாரிகள் சோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....