Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசென்னைக்கு மாற்றலாகிறார் ஆர்யன் கான் வழக்கின் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே..

    சென்னைக்கு மாற்றலாகிறார் ஆர்யன் கான் வழக்கின் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே..

    மும்பை பகுதிக்குட்பட்ட முன்னாள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாய் இருந்த சமீர் வான்கடே சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் உபயோகித்தது தொடர்பான வழக்கில் மந்தமான விசாரணையினை மேற்கொண்டதற்காக உள்துறை அமைச்சகமானது இந்த முடிவினை எடுத்துள்ளது.

    சென்ற வாரம் ஆர்யன் கானிடம் எந்த விதமான போதைப்பொருளும் கிடைக்கவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    ஆர்யன் கானின் இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை சமீர் வான்கடே தலைமையில் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வான்கடே பணம் கேட்டதாகவும், பணி மேரியாதவும் கூறப்பட்டதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப் பட்டது.

    இந்திய வருவாய்ப் பணி அலுவலராக சென்னை வரும் வான்கடே தனது மாற்றல் குறித்து, ‘எதிர்மறையான எண்ணங்களுக்கு நான் எப்போதும் இடமளிப்பதில்லை. அவற்றுக்கு இடமளித்தல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது. ஒரு விடயத்தினைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 6000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பெயர் இடம்பெறவில்லை. அவர் மீது எந்த விதமான குற்றங்கள் இருந்த போதிலும் குற்றம் சட்டப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்திருந்தது.

    ஆர்யன் கான் வழக்கில் நடந்த ஊழல் தொடர்பாக வான்கடே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு கூடிய விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீர்ப்புக்குப் பிறகு வான்கடே மீதான ஒழுங்கீன நடவடிக்கையினை அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் ஆசிரியர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை – நீடிக்கும் பதற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....