Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜம்மு காஷ்மீரில் ஆசிரியர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை - நீடிக்கும் பதற்றம்!

    ஜம்மு காஷ்மீரில் ஆசிரியர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை – நீடிக்கும் பதற்றம்!

    ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் ரஜினி பாலா என்கிற பெண் ஆசிரியை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

    ஜம்முவில் உள்ள சம்பா பகுதியில் வசிக்கும் ரஜினி, குல்கம்மில் உள்ள கோபால்போரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ரஜினி பாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள காவல்துறை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வாங்கித் தரப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

    தாக்குதல் நடந்த இடமானது தற்போது காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ‘ரஜினி, குல்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரியை. தீவிரவாதிகளின் ஒரு வெறுக்கத்தக்க தாக்குதலின் மூலம் தனது இன்னுயிரை அவர் இழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ‘தீவிரவாதிகளால் குறிவைத்து தாக்கப்பட்ட மற்றொரு தாக்குதல் இது; இது மாதிரியான தாக்குதல்களால் பல காஷ்மீர் மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அரசாங்கமானது ஓயக்கூடாது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடரும் தாக்குதல்கள்..

    மூன்று வாரங்களுக்கு முன்பு, ராகுல் பாட் என்ற அரசு அலுவலர் தீவிரவாதிகளால் அவரது அலுவலகத்தின் உள்ளேயே கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தினை வன்மையாகக் கண்டித்து போராட்டங்கள் அந்த பகுதியில் வெடித்தது. 

    ராகுல் பாட் புட்கம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கிளார்க்-ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு வாரத்திற்கு முன்பு, அம்ரீன் பாட் என்கிற 35 வயதுடைய நபர் அதே புட்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதலில் அவரது பத்து வயது உறவினர் ஒருவரும் காயமடைந்தார். காவலர்கள் கொடுத்த தகவலின் படி இந்த தாக்குதலானது லஸ்கர் இ தொய்பா அமைப்பினரால் நடத்தப்பட்டதாக கருதப்பட்டது.

    இந்த மாதத்தில் மட்டும் இது வரை ஏழு பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற தாக்குதல்களினால், காஷ்மீரில் வாழும் மக்களிடையே பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது.

    மனிதர்களால் இந்த உலகினை விட்டுச் சென்ற ஒரு பறவை இனத்தின் கதை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....