Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்30 நாட்களுக்கு பிறகும் அரசு செவி சாய்கவில்லை என்றால்....அண்ணாமலை பேச்சு!

  30 நாட்களுக்கு பிறகும் அரசு செவி சாய்கவில்லை என்றால்….அண்ணாமலை பேச்சு!

  தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

  ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்து, மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

  இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து, இன்று கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.

  அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று, எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.

  இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வி.பி. துரைசாமி கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு இரண்டு முறை கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து உள்ளது. ஆனால் இங்கே உள்ள சினிமா அரசு வாய் சவடால் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது.

  ஒவ்வொரு ஊராக சென்று அமைச்சர்கள் பட்டத்து இளவரசரை அமைச்சராக கூட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையை எழுதிய டி.ஆர்.பாலுவை முதல்வராக்குங்கள், நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்.

  பா.ஜ.க போராட்டத்துக்கு பயந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று உள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறோம் என சத்தியம் செய்துதான் திமுக ஆட்சி வந்தது. நீங்கள் சொன்னதை ஏன் செய்யவில்லை என்பதற்காகத் தான் இந்த ஆர்ப்பாட்டம்.

  இந்த விடியா அரசின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. இன்னும் 750 நாட்கள் தான் இருக்கிறது. தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் அடுத்த கட்ட ஊழல் பட்டியலை வெளியிட உள்ளோம்.

  பிரதமர்..

  பிரதமரை அமர வைத்து கொண்டு என்ன பேசினாலும், அதை கேட்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. கச்சத்தீவை கனவில் கூட திமுகவால் மீட்க முடியாது. அதை மீட்பதற்கு உங்களுக்கு அருகதை கிடையாது. பிரதமர் மோடிக்கு அதை எப்படி இங்கு கொண்டு வருவது என்பது தெரியும். மோடி, முன் முதல்வர் பேசிய அனைத்து தகவல்களும் தப்பானவை. இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் எழுச்சி.

  மக்களை வேறு மொழி படிக்க அனுமதியுங்கள் அதுதான் நமது புதிய கல்வி கொள்கை. இதை நமது முதல்வர் புரிந்துக் கொள்ள வேண்டும். கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் 20 நாட்கள் கழித்து மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் இருப்போம்.

  30 நாட்களுக்கு பிறகும் அரசு செவி சாய்கவில்லை என்றால் 10 லட்சம் பா.ஜ.க வினர், திருச்சியில் கண்டன பேரணியில் ஈடுபடுவோம். திருச்சி பேரணி திமுகவிற்கு அஸ்தமனமாக அமையும். அடுத்த 2 வருடங்களுக்கு பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்துக்கும், கைதுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

  திமுகவை நாம் சும்மா இருக்க விட போவதில்லை. எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அரசு இயந்திரத்தை வைத்து கொண்டு திமுக போடும் கோமாளி வேசங்களை பா.ஜ.க பொறுத்து கொண்டு இருக்காது என்று அவர் கூறினார்.

  ஜம்மு காஷ்மீரில் ஆசிரியர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை – நீடிக்கும் பதற்றம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....