Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு பருவமழையில் குளிரப்போகும் மாவட்டங்கள்!

    அடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு பருவமழையில் குளிரப்போகும் மாவட்டங்கள்!

    தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம். 

    இன்று, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, மே 31-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    • நாளை, ஜூன் 1- ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    • ஜூன் 2- ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
    • அதேபோல், ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    • அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கக் கூடும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் இருக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    • தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத்தீவு, கேரள மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் மாலத்தீவு பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து பலத்தகாற்று வீசக்கூடும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள், இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    நாம் இழக்கிறோமா மண்வளத்தை? ஏன் மண்வளம் முக்கியம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....