Saturday, March 16, 2024
மேலும்
    Homeஆன்மிகம்ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் பிரபலாமானது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். 

    அந்தவகையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோயில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்றுமுதல் வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி வரை பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

    மேலும், மண்டல காலம் முடிந்து, அடுத்த ஒருவருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வும் இன்று நடைபெறுகிறது. 

    முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 18 மேல்சாந்திகளின் பெயர்களை வெள்ளி கோப்பையில் வைத்து பந்தளம் அரண்மனையிலிருந்து வரும் சிறுவரான கிருத்திகேஷ் வர்மா, சபரிமலை மூலவர் கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் மற்றும் பவுர்ணமி வர்மா (சிறுமி) மாளிகை புரம் தேவி கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். 

    இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து இருமுடி கட்டி, கிருத்திகேஷ் வர்மா மற்றும் பவுர்ணமி வர்மா ஆகிய இருவரும் புறப்பட்டனர்.

    மேலும், மன்னர் சித்திரை திருநாள் பிறந்த நாளையொட்டி 24 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தெலுங்கில் கால்தடம் பதிக்க உள்ள ‘மேயாத மான்’ நடிகை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....