Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த வாரிசு பட அப்டேட்; என்ன ரசிகர்களே குஷியா?

    வெளிவந்த வாரிசு பட அப்டேட்; என்ன ரசிகர்களே குஷியா?

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட் வெளிவந்துள்ளது. 

    இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. எப்படியாவது பொங்கலுக்கு திரைப்படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது.

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரவுள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘தீபாவளி’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் விஜய் பாடியிருப்பதாகவும், அப்பாடல்தான் தீபாவளியை முன்னிட்டு வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க: இசைப்புயலோடு மாஸ்டர் பிளாஸ்டர் எடுத்த வைரல் புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....