Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்இசைப்புயலோடு மாஸ்டர் பிளாஸ்டர் எடுத்த வைரல் புகைப்படங்கள்

    இசைப்புயலோடு மாஸ்டர் பிளாஸ்டர் எடுத்த வைரல் புகைப்படங்கள்

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார். 

    சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்பட, உலகம் முழுவதும் 500 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து தற்போது தமிழில் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ திரைப்படத்திற்கும், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்திற்கும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

    இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானான சச்சினை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்ததோடு, “மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன்” எனக் குறிப்பிட்டு நண்பர்களின் இலக்கு என பதிவிட்டுள்ளார். சச்சின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இருக்கும் இந்தப்புகைப்படம் தற்போது வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

    சச்சின், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி, அந்தத் தொடரை வென்று கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஆசியக் கோப்பையில் மாஸ் காட்டிய இந்தியா; உலகக் கோப்பைக்கு என்ட்ரி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....