Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை; வெளிவந்த தகவல்

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை; வெளிவந்த தகவல்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

    2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது. 

    இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

    இந்நிலையில், தற்போது அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், இறுதி அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. 

    இந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 காவல் துறையினர் மீது நடவடிக்கைக் கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....