Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்; குவைத்திலிருந்து ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட நண்பன் கைது

    நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்; குவைத்திலிருந்து ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட நண்பன் கைது

    நாகர்கோயில் காசி வழக்கில் அவனது நண்பனான கௌதமை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போல தமிழகத்தை உலுக்கிய சம்பவம் தான் நாகர்கோயில் காசியின் பாலியல் வழக்கு. 

    கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என 90-க்கும் மேற்பட்ட பெண்களிடம்  சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் நெருங்கி பழகி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளான். மேலும், காசி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

    கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் காசியின் ஆடம்பர வாழ்க்கை பலரை ஆச்சரியமடைய வைத்தது. இந்நிலையில் தான் 2020 ஆம் ஆண்டு காசிக்கு சென்னையை சேர்ந்த பெண் மருத்துவா் காசியை சிறைக்கு செல்ல வைத்தார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராமல் இருந்தனர். 

    இந்நிலையில் தான் அந்தப் பெண் மருத்துவர் நாகர்கோயில் காவல் கண்காணிப்பாளருக்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னர் காசி கைது செய்யப்பட்டான். அப்போது அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து, தீவிரமடைந்த இந்த வழக்கு, பின்னர் மேலும் பல பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். மகளிர் சங்கங்களின் போராட்டங்களால் காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. 

    இந்நிலையில் குவைத்தில் இருந்து ஆபாச காணொளிகளை வெளியிட்டு வந்த காசியின் நண்பன் கௌதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். 

    விசாரணையில், காசி ரகசியமாக எடுக்கும் காணொளிகளை அவனது நண்பர்கள் டேசன் ஜினா, தினேஷ், கௌதம் ஆகியோருக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. 

    இதில், கௌதம் மட்டும் குவைத்தில் வேலைபார்த்து வந்த நிலையில் அவனை இரண்டு ஆண்டுகளாக கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. காசி சொல்லியபடி அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் காணொளிகளை கௌதம் வெளியிட்டு வந்துள்ளான். 

    இந்நிலையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், குவைத்திலிருந்து திருவனந்தபுரம் வந்த கௌதமை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....