Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரும்பு கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 2500 கோடி சம்பாதித்த இந்திய ரயில்வே

    இரும்பு கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 2500 கோடி சம்பாதித்த இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வே ரூ.2500 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்திய ரயில்வே ‘ஸ்கிராப்’ விற்பனை மூலம் மட்டும் ரூ.2500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாயானது கடந்த நிதியாண்டை விட 28 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, வருகிற 2022-2023 ம் ஆண்டில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    இந்த ஸ்கிராப் பொருட்களை திரட்டி, மின்-ஏலம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் இருக்கும் வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இருப்பினும், சமீபத்தில் தெற்கு ரயில்வே பண்டிகை நாட்களை முன்னிட்டு நடைமேடை கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தியது நினைவு கூறவேண்டியது.

    இதையும் படிங்க: தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை; வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....