Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்த புடின்; ஏன்? எதற்கு?

    வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்த புடின்; ஏன்? எதற்கு?

    வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின்.

    நேட்டோ (The North Atlantic Treaty Organization – NATO) என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. 1949-ம் ஆண்டு உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, நார்வே, போர்ச்சுகல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவான ராணுவக் கூட்டமைப்புதான் நேட்டோ அமைப்பு. தற்போது 30 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அமைப்பின் ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால், பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும்.

    ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கான காரணம்:

    சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இணையக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. உக்ரைன், நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ரஷ்யா எண்ணுகிறது. ரஷ்யாவின் வலியுறுத்தலையும் மீறி உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு காரணம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனிலிருந்த க்ரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

    மேலும், கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினைவாதிகளையும் ரஷ்யா மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவருகிறது. உக்ரைன் எல்லைகளில் பல்வேறு பிரச்னைகள் நீடித்துவருகின்றன. நேட்டோவில் உறுப்பு நாடாக தன்னை இணைத்துக்கொண்டால், எல்லையில் பிரச்னை மற்றும் கிளர்ச்சியாளர்களைச் சமாளிக்க உதவும் என்று நம்புகிறது. மேலும், உக்ரைனைவிட அதிக ராணுவ பலம் பொருந்திய நாடு ரஷ்யா. ரஷ்யாவைத் தனித்தனியாக எதிர்ப்பது முடியாத காரியம். இதனால்தான், எப்படியாவது நேட்டோவில் இணைய வேண்டும் என்று முயல்கிறது உக்ரைன். உக்ரைன் நேட்டோவில் உறுப்பு நாடக இணையக் கூடாது என்று போர் தொடுத்துள்ளது ரஷ்யா.

    இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளன. இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘ வெளி நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். அந்நிறுவனங்களின் வெளியேற்றத்தால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’ இவ்வாறு அதிபர் புடின் தெரிவித்தார்.

    குப்பையில் எலும்புக்கூடு இருந்ததன் பின்னணி என்ன? சென்னையில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....