Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்இன்றைய அமாவாசையில் இப்படி வழிபடுங்கள்; பலன்கள் உங்களுக்கு கைகூடும்!

    இன்றைய அமாவாசையில் இப்படி வழிபடுங்கள்; பலன்கள் உங்களுக்கு கைகூடும்!

    சந்திரன் முழுவதுமாக மறைந்து விடும் தினமான அமாவாசை தினம், பல ஆன்மீக செயல்களை செய்வதற்கு ஏற்ற தினமாக இருக்கிறது. இந்த வைகாசி அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

    வைகாசி அமாவாசையில், தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி வழிபட்டால், கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள், பெருமக்கள்.

    அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது.

    அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். இம்மாதம் 30.05.2022 திங்கட்கிழமை அன்று அமாவாசை. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் அமாவாசை வருவது விசேஷம்.

    இந்த நாளில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தூப தீப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள் மற்றும் காகங்களுக்கு வழங்குங்கள்.

    வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

    மேலும், திருமணத்தடை புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை போன்றவை ஏற்படாமல் காக்கும்.

    எனவே, அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதியுங்கள். அன்றைய நாளில், முன்னோரை நினைத்து ஐந்து பேருக்காவது உணவு வழங்குங்கள்.

    உங்கள் இல்லத்தில் உள்ள குறைகளையெல்லாம் போக்கியருள்வார்கள் பித்ருக்கள். கேட்ட வரங்களையெல்லாம் தந்தருள்வார்கள். நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்தருள்வார்கள். வீட்டில் இதுவரை இல்லாத நிம்மதியும் சந்தோஷமும் இனி குடியேறும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். தரித்திரம் விலகும்.

    குப்பையில் எலும்புக்கூடு இருந்ததன் பின்னணி என்ன? சென்னையில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....