Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரில் சண்டையிட்ட ரஷ்யா-அமெரிக்கா இணையதளப் போர் !

    ட்விட்டரில் சண்டையிட்ட ரஷ்யா-அமெரிக்கா இணையதளப் போர் !

    உக்ரைன்-ரஷ்யா போர்த் தீவிரம் காரணமாக அமெரிக்கா ரஷ்ய நாட்டிற்கு பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யா அதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் விண்வெளி ஏவுகணைக்கு நாங்கள் இன்ஜின் தரப் போவதில்லை என்றது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக அமெரிக்கா, நாங்கள் உங்களை நம்பி இல்லை, எங்களிடம் ஏற்கனவே நிறைய இருப்பு இருக்கிறது என பதிலடிக் கொடுத்துள்ளது. 

    சர்வ தேச விண்வெளி நிலையமான ( iss ) நாசா கூட்டமைப்பு பல்வேறு நாடுகளைக் கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டது . இதில் பல கூட்டு நாடுகள் உள்ளன. வானியல் ஆராய்ச்சிகளுக்காக குறிப்பிட்ட பல நாடுகள் ஒன்றிணைதந்து உருவானது தான் இந்தச் சர்வதேச விண்வெளி நிலையம். iss

    இதனிடையே உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக பல்வேறு விண்வெளித் திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் உடைந்து இரண்டாக பிரிந்து விடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. காரணம், ரஷ்யாவிடம் தான் ஏவுகணைக்கு தேவையான அதிக பாகங்கள் மற்றும் எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டால் விளைவுகள் அதிகமாக இருக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    இந்தப் போரின் காரணமாக ரஷ்யாவிற்கு பல நாடுகள் பொருளாதார தடையை விதித்து இருந்தது. அமெரிக்காவும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல பொருளாதார தடைகளை விதித்தும் வந்த நிலையில், 

    ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி தலைவரான டிமிட்ரியும் அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரரும் ட்விட்டரில் சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    டிமிட்ரி, ஒரு வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அதில் எந்தெந்த நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து செயல்படுகிறதோ அந்த நாடுகளின் கொடிகளை அடுத்து விண்ணிற்கு செலுத்த உள்ள ஏவுகணையிலிருந்து வெள்ளை காகிதங்களை ஒட்டி மறைக்கும் விதமாக இருந்தது. மேலும் அந்த வீடியோவின் கீழ், சில நாடுகளின் கொடிகள் இல்லாமல், இப்போது மிகவும் அழகாக இருக்கிறது எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

    dmitry

    அந்த கருத்துக்கு பதில் அளித்த அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஸ்காட் கிள்ளி, “எந்தவித நாடுகளின் உறுதுணை இல்லாமல் உங்களின் விண்வெளி ஆய்வுகள் வெற்றி அடையாது. இன்றும் மெக்டொனால்ட் ரஷ்யாவில் இருக்கிறது என்றால் நீங்கள் அனைவரும் அங்கு தான் வேலை பார்க்க வேண்டும்” என்று கேலி செய்யும் விதமாக தெரிவித்திருந்தார்.

    அதற்கு டிமிட்ரி, முட்டாள்தனத்தை விட்டுவிடு என்றும் உன் இந்த பேச்சால் தான் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்  (iss) உடைய போகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பதிவை அழித்தும் விட்டார். scot kelly

    உடனே இஸ்காட் கிள்ளி, அதை சிகிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு, “ஏன் இதை அழித்து விட்டீர்கள் உங்கள் இந்த குழந்தைத் தனமான பேச்சை உலகம் பார்க்கட்டும்” என்று பதிவிட்டார். அதற்கு டிமிட்ரி, இஸ்காட் கிள்ளியை பிளாக் செய்துவிட்டார்.

    ட்விட்டரில் நடந்த இந்தச் சண்டையின் நடுவில்,

    இரண்டு மூன்று நாட்களாகவே சர்வ தேச விண்வெளி நிலையம் இரண்டாக பிரிவது போன்ற காட்சியமைப்பு வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. இதில் ரஷ்யாவின் விண்வெளி அமைப்புக் காலம் மட்டும் தனியாகப் பிரிவது போன்ற காட்சியமைப்பும் அதில் உள்ள விண்வெளி வீரர்கள் அந்த காலத்தைப் பிரித்து தனியாக வருவதுப் போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. 

    இதைச் செய்தது யார் என்று பார்க்கையில் ரஷ்யாவின் ஒரு அமைப்பானது தான் இப்படிச் செய்திருக்கிறது என தெரிகிறது. 

    இன்னொரு பக்கம் நாசா அமைப்பு போருக்கும் நமக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, நாம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒன்றிணைந்தே செயல்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....