Monday, March 27, 2023
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபெனிஸிமாவின் ஹாட்ரிக் கோல் : காலிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் அணி !

    பெனிஸிமாவின் ஹாட்ரிக் கோல் : காலிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் அணி !

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பையினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸின் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தியது. அதிகபட்சமாக, அந்த அணியின் கரீம் பெனிஸிமா ஹாட்ரிக் கோல் அடித்தார்.

    ஐரோப்பாவின் முன்னணி அணிகளுக்கிடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் தொடரின் லீக் போட்டியில்  இன்று முன்னணி அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பிஎஸ்ஜி அணிகள் மோதிக்கொண்டன.

    Kylian Mbappe

    ஆட்டத்தின்  முதல் பாதியில் பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே 39வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் பிஎஸ்ஜி அணி முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் டொன்னாரம்மா செய்த சிறிய தவறை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு  ரியல் மாட்ரிட்டின் கரீம்  பெனிஸிமா ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். லூகா மோட்ரிகின் அற்புதமான ஆட்டத்தால் கரீம் பெனிஸிமா முறையே 76 மற்றும் 78வது  நிமிடத்தில் கோல் அடித்து சாம்பியன்ஸ் லீக்கில் தன்னுடைய ஹாட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

    Karim Benzema

    பிஎஸ்ஜியின் மார்கோ வெர்ராட்டி மிட்பீல்டில் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் டொன்னாரம்மா தவிர அந்த அணியின் ஒவ்வொருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவரின் மோசமான ஆட்டமே பிஎஸ்ஜியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.

    மைதானத்தில் குழுமியிருந்த 60,000 ரசிகர்களின் “Así gana el Madrí” அதாவது “ இப்படித்தான் ரியல் மாட்ரிட் வெற்றி கொள்ளும்” என்ற ஆரவாரத்துடன் ரியல் மாட்ரிட் அணி காலிறுதியில் நுழைந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...