Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாரதிய ஜனதா மற்றும் ஆளும் காங்கிரஸை வழியனுப்பிய ஆம் ஆத்மி!

    பாரதிய ஜனதா மற்றும் ஆளும் காங்கிரஸை வழியனுப்பிய ஆம் ஆத்மி!

    பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம் , உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அவற்றின் தேர்தலின் முடிவுகள் இன்று வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி, கோவாவில் பாரதிய ஜனதா கட்சி 19 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை ருசிக்க காத்திருக்கும் நிலையில் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. உத்திரபிரதேசத்திலும், மனிப்பூரிலும் கூட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

    ஆம் ஆத்மி
    முதல்வர் வேட்பாளருடன் அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆனால், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா மிகவும் பின்தங்கியபடியே இருந்து வந்தது. ஏறத்தாழ பஞ்சாப் மாநிலத்தின் தேர்தல்கள் முடிவுகள் வெளிவந்துவிட்டது என்றே கூறலாம். அதன்படி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி இம்முறை பஞ்சாப்பை கைப்பற்றியுள்ளது. ஆம்! மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் தற்போது வரை 92 இடங்களில் முன்னிலைப்பெற்று பெரும்பாண்மையுடன் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்கவிருக்கிறது, ஆம் ஆத்மி.

    பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் மீது விவசாயிகள் போராட்டம், விவசாய சட்டங்களை திரும்பிப் பெற்ற நிகழ்வுகளால் பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அதனின் வெளிப்பாடே பஞ்சாப் மாநிலத்தின் பாரதிய ஜனதாவின் படுதோல்வி என்று பேசப்படுகிறது. 117 தொகுதிகளில் பாரதிய ஜனதா இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸூம் உட்கட்சி பூசல்களால் வலுவிழந்தது. இவைகள் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டன.ஆம் ஆத்மி டெல்லியைப்போலவே இங்கும் இலவச மின்சாரம் வழங்குவோம். அதுவும், ஒரு குடும்பத்துக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதியும் செய்து தரப்படும்’  என ‘டெல்லி மாடல்’ தலைப்பை எடுத்துக்கொண்டு அதனை தனது பிரச்சாரங்களில் ஆம் ஆத்மி மையப்படுத்தி பேசியது நல்ல பலனையே தந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்தான் என்பது நிரூபனமாகியுள்ளது.

    மேலும் தனது தொகுதியில் வெற்றி உரையாற்றிய பகவந்த் மான் தன்னுடைய பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான நவன்சகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்த வெற்றியால் ஆம் ஆத்மி தலைமையம், கட்சி உறுப்பினர்களும் ஆனந்தத்தில் உள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....