Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுதல் ; 1040 பேர் உயிரிழப்பு

    கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுதல் ; 1040 பேர் உயிரிழப்பு

    கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகளில் 1,040 பேர் உயிரிழந்தனர். 

    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ‘2021-இல் நிகழ்ந்த சாலை விபத்துகள்’ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் 1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3.84 லட்சம் மேர் படுகாயமடைந்தனர்.  

    சாலை விபத்து குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; 

    2021-ஆம் ஆண்டு கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதால், 1,997 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,040 பேர் உயிரிழந்தனர்.  மேலும், சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் விதியை மீறிச் சென்றதன் காரணமாக 555 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதில், 222 பேர் உயிரிழந்தனர்.  சாலைகளில் காணப்படும் பள்ளங்களின் காரணமாக 3,652 சாலை விபத்துகள் நிகழ்ந்தது. அதில் 1,481 பேர் உயிரிழந்தனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? – துர்நாற்றத்தில் ஊழியர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....