Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுத்தாண்டு கொண்டாட்டம்; கேரள மது பிரியர்களின் ஒரு நாள் சாதனை!

    புத்தாண்டு கொண்டாட்டம்; கேரள மது பிரியர்களின் ஒரு நாள் சாதனை!

    கேரளாவில் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 107 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

    உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது. 

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு கேரள மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. கேரள அரசுக்கு சொந்தமான மொத்தம் 268 பெவ்கோ (Kerala State Beverages Corporation Ltd) கடைகள் இருக்கின்றன. அந்த வகையில், திருவனந்தபுரத்தில் பவர் ஹவுஸ் சாலையில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று ஒருநாள் மட்டும் 1 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றது. 

    அதே சமயம், கேரளாவில் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 95.67 கோடிக்கு நடந்த மது விற்பனை, இந்த ஆண்டு 107.14 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. 

    அதேபோல், டிசம்பர் 22 முதல் 31 வரையிலான ஆண்டின் கடைசி 10 நாட்களில் மட்டும் அதவாது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மட்டும் 686.28 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதே வேளையில் கடந்த ஆண்டு 649.30 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

    நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....