Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமுடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

    முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பெங்களூர், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருகை புரிந்தனர். 

    கடந்த மூன்று தினங்களாக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை  புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில், புத்தாண்டை கொண்டாடி முடித்த நிலையில் நேற்று மாலை முதல் தற்போது வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல புறப்பட்டனர். 

    இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்காக பொதுமக்கள் முண்டியடிக்கும் ஏறுகின்றனர். 

    மேலும், பேருந்துகளும் சிறிது நேரத்திலேயே முழுவதும் நிரம்பி கூட்ட நெரிசலோடு செல்கிறது. பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....