Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமக்களே உஷார்.. 'ப்ளூ' காய்ச்சல் பரவும் அபாயம்; பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைவிட்ட புதுவை அரசு

    மக்களே உஷார்.. ‘ப்ளூ’ காய்ச்சல் பரவும் அபாயம்; பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைவிட்ட புதுவை அரசு

    புதுச்சேரியில் புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் கடந்த சில நாள்களாகவே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குனர், புதுச்சேரி கல்வித்துறை இயக்குனருக்கு பிரிந்துரை கடிதம் எழுதினார். 

    இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று, இன்று (செப்டம்பர் 17) முதல் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி வரை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    இதனிடையே, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று முதல் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், முன்பே திட்டமிடப்பட்டிருந்த படி வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

    இந்நிலையில், இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்களும் வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....