Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்! பொதுச்செயலாளராக தேர்வானதற்கு எதிராக நீதிமன்றத்தில் புதிய வழக்கு

    எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்! பொதுச்செயலாளராக தேர்வானதற்கு எதிராக நீதிமன்றத்தில் புதிய வழக்கு

    எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    அதிமுகவில் தற்போது பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரிய மூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இந்த வழக்கைச் சூரிய மூர்த்தி தொடர்ந்து இருக்கிறார்.

    இதையும் படிங்க: “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!

    இந்த வழக்கில், பொதுக்குழுவை எதிரத்த மனு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என மனுவில் சூர்யகுமார் தெரிவித்து உள்ளார். 

    இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....