Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமனம்

    பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமனம்

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை நியமனம் செய்து இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அதன் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. முன்னதாக தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலம் மற்றும் அதன் உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசிடம் கொடுத்தனர். 

    இந்நிலையில், அவர்களது பதவி விலகலை ஏற்ற தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

    பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ச.கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்னன், கே.மேக்ராஜ் மற்றும் முனைவர்கள் மதியழகன், சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்கஎடப்பாடி பழனிச்சாமி திருந்தி வந்தால் ஏற்று கொள்ள நாங்கள் தயார்: டி டி வி தினகரன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....