Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅசோக் லேலண்ட் அறிமுகப்படுத்திய புதிய தளம்; வெளிவந்த அறிவிப்பு

    அசோக் லேலண்ட் அறிமுகப்படுத்திய புதிய தளம்; வெளிவந்த அறிவிப்பு

    அசோக் லேலண்ட், இடைநிலை வர்த்தக வாகனப் பிரிவில் ‘பார்ட்னர் சூப்பர்’ என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அசோக் லேலண்ட் புகழ்பெற்ற வாகன நிறுவனங்களில் ஒன்றாகும். அவ்வபோது புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிறுவனமாக அசோக் லேலண்ட் உள்ளது. இந்நிலையில், புதிய வர்த்தக தளத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    அதன்படி, ‘பார்ட்னர் சூப்பர்’ என்ற பெயரில் புதிய வர்த்தக தளத்தை இடைநிலை வர்த்தக வாகனப் பிரிவில் அசோக் லேலண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் ‘914’ ரகம் 9.15 டன் எடைத் திறன் கொண்டதாகவும், ‘1014’ மற்றும் ‘1114’ ரகங்கள் முறையே 10.25 டன் மற்றும் 11.28 டன் எடைத் திறன் கொண்டவையாகவும் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இந்த ‘பார்ட்னர் சூப்பர்’ தளமானது,  குளிர்பான நிறுவனங்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையினர், பழங்கள், பார்சல்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்வோர் உள்ளிட்டோரது பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:  தெலுங்கிலும் கல்லா கட்டப்போகும் ‘லவ்-டுடே’..வாழ்த்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....