Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. 

    தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவியில் மக்கள் கூட்டம் களைகட்டும். இங்குள்ள பிரதான குற்றால அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கமாகும். 

    இந்நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும் மழை பெய்து வருகிறது. இதனால், பிரதான அருவியான குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    ஒக்கேனக்கலில் 5-வது நாளாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....