Monday, May 15, 2023
மேலும்
    Homeதொழில்நுட்பம்1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்

    1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1800 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளது.

    உலகின் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 1800 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.

    இது தொடர்பாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்கட்டமைப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

    மேலும், எல்லா நிறுவனங்களைப் போலவும் நாங்களும் வழக்கமான அடிப்படையிலேயே வணிகம் செய்கிறோம். ஆதலால், மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 1.80 லட்சம் ஊழியர்களில் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தது. 

    அதோடு, சில புதிய திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதால் அடுத்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக புதிய ஊழியர்களை பணியமர்த்துவோம் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இந்திய ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....