Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒக்கேனக்கலில் 5-வது நாளாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை

    ஒக்கேனக்கலில் 5-வது நாளாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை

    ஒக்கேனக்கல் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் ஒட்டியபடி  ஒக்கேனக்கலுக்கு வந்துக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 34,875 கன அடியும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 46,518 கன அடியும் என மொத்தம் 81,393 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், 4-வது நாளாக ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒக்கேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    110 அடியை தாண்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....