Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாமக நிறுவனர் ராமதாசுக்கும் கொரோனா தொற்று!

    பாமக நிறுவனர் ராமதாசுக்கும் கொரோனா தொற்று!

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனுரும் மருத்துவருமான ராமதாசு அவரது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் என்று தோட்டத்தில் வசித்து வருகிறார். மருத்துவர் ராமதாசு கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களை சந்தித்து வந்தார். 

    இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சோர்வுடன் காணப்பட்ட அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

    பரிசோதனையின் முடிவில் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இதனிடையே, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    மேலும், “அய்யா மருத்துவர் ராமதாசு அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது, அவரும் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ராமதாசு ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....