Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"ஊழல்" சொல்லுக்கு நாடாளுமன்றத்தில் தடையா?

    “ஊழல்” சொல்லுக்கு நாடாளுமன்றத்தில் தடையா?

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டிருக்கிறார். 

    ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களையும் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் வைத்தே வார்த்தைகளுக்கான தடை முடிவு செய்யப்படுகிறது. 

    ஆண்டுதோறும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களில் சர்ச்சை ஏற்படுத்திய வார்த்தைகள் முதலில் தொகுக்கப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 2021-ம் ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்திய வார்த்தைகள் அடங்கும். 

    மேற்கூறியவை மட்டும் அல்லாது, இந்த ஆண்டு தொடங்கி இதுவரை காமன்வெல்த் நாடுகளில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளும் இந்த பட்டியலில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலில், சகுனி, சர்வாதிகாரி, வெட்கப்படவேண்டும், ஊழல், கோழை, குற்றவாளி, முதலைக் கண்ணீர், கழுதை, நடிப்பு, துரோகம், பொய், பாசாங்குத்தனம் உள்ளிட்ட பல வார்த்தைகள் உள்ளது. 

    இந்த தடை செய்யப்பட்ட வார்த்தைகள் மீதான இறுதி முடிவை மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை துணைத் தலைவருமே முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாமக நிறுவனர் ராமதாசுக்கும் கொரோனா தொற்று!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....