Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஅடித்து நொறுக்கப்பட்ட கடைகள்..! அதிரடி காட்டிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

    அடித்து நொறுக்கப்பட்ட கடைகள்..! அதிரடி காட்டிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

    புதுச்சேரி மூலக்குளம் முதல் பிச்சைவீரன்பேட் வரை சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மூலக்குளம் முதல் பிச்சைவீரன்பேட் வழியாக பெரம்பை வில்லியனூர் வரையில் சாலை விரிவாக்கம் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மூலக்குளம் பகுதியில் இருந்து பிச்சவீரன்பேட் வரை சாலையோரம் ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெற்றது.

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் தாசில்தார் ராஜேஷ்கண்ணா, உழவர்கரை நகராட்சி ஆணையர் தலைமையில் உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர்கள் ஜாகீர் உசேன், மோகன் மற்றும் போலீசாரின் பாதுகாப்புடன் சாலையோர வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: புதுவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 வாக்காளர்கள் குறைவு..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....