Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 வாக்காளர்கள் குறைவு..!

    புதுவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 வாக்காளர்கள் குறைவு..!

    புதுச்சேரி மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். கடந்த ஆண்டை விட 14 ஆயிரத்து 160 வாக்காளர்கள் குறைந்துள்ளதாக தகவல்.

    புதுச்சேரி மாநிலத்தில் 2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலை புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்காளர் திருத்தப்பணிகள் இன்று தொடங்கி வரும் ஜனவரி.23, 5ந்தேதி வரை நடைபெறுகின்றது. என்றும் 2023.ஜனவரி 5ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர் தேர்தல் துறை புதிய செயலி மூலம் புதியவாக்காளர்கள் தங்களை பதிவு செய்யும் முறை இந்தாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகின்றது என்றார்.

    அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 9,96,295 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள்- 4,68,464 நபர்களும், பெண் வாக்காளர்கள் 5,27,694 பேரும், 3 ஆம் பாலினத்தில் 137 பேரும் உள்ளனர் என்றும் தெரிவித்த அவர் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்த 10,10,455 வாக்காளர்கள் 14,160 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இந்தாண்டு 9,96,295 வாக்காளர்கள் இறுதி செய்யபப்ட்டுள்ளார்கள் என்றவர்புதுச்சேரி மாநிலத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வில்லியனூர் தொகுதியில் 43, 572 வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உருளையான்பேட்டை தொகுதி 24,434 வாக்காளர்கள் உள்ளனர் எனவும், கடந்த பொதுத்தேர்தலில் 954 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது 959 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் ஜவஹர்.

    மேலும் 73% வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்னை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர் எனவும் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்- அமைச்சர் ரகுபதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....