Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்.. 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; முடிவுக்கு வருமா...

    ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்.. 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்?

    ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பிலும் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

    ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போரின் காரணமாக இரு நாடு தரப்பு மக்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பொதுமக்கள் பலரும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் தனது விடாமுயற்சியால் மீண்டும் எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தப்போரில் இரு நாட்டு தரப்பிலும் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

    இது தொடர்பாக அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரியான ஜென் மார்க், ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்றும் இரு நாடு தரப்பிலும் 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். 

    மேலும் பரஸ்பர அமைதி வெறும் ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே முடியாது என்றும், அதற்கு வேறு வழிகளில் திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் போர் நடவடிக்கைகளால் உக்ரைனில் கடந்த ஆறு மாதங்களாக 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழைக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதனிடையே, இந்தப்போரினால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்க: கார் வெடிப்பு சம்பவம்: கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை..! 45 இடங்களில் அதிகாரிகள் சோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....