Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாகியான்வாபி வழக்கில் புதிய திருப்பம்..! கசிந்த காணொளியில் இருந்த திரிசூலக் குறியீடு..!!

  கியான்வாபி வழக்கில் புதிய திருப்பம்..! கசிந்த காணொளியில் இருந்த திரிசூலக் குறியீடு..!!

  ‘கியான்வாபி பள்ளி வாசல் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி’ என்று தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், கோவிலின் வெளிப்பகுதிகளில் திரிசூலக் குறியீடுகள் தென்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

  வழக்கு கடந்து வந்து பாதை..

  வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியினை இடித்து கிபி 1699ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கியான்வாபி பள்ளிவாசல் நிறுவப்பட்டதாகவும், அங்கு தங்களை வழிபடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அங்கு இருந்த இந்துக்கள் 1991ம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.

  இந்த வழக்கினை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்றம், அதே ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி இந்துக்களின் இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது.

  1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியிலிருந்து இருக்கும் ஒரு வழிபாட்டுத் தளமானது எந்த விதத்திலும் உருமாற்றம் செய்யத் தடை விதிப்பதுடன் அதன் சமயத் தன்மையினை உறுதி செய்வதற்கும் 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வழிவகை செய்கிறது.

  ஆனால், இந்த சட்டமானது 1958ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்டுள்ள தொன்மையான வரலாற்று சின்னங்களுக்குப் பொருந்தாது என்றும் அடிக்குறியிட்டுள்ளது.

  இந்த சட்டத்தினை மேற்கோள் காட்டியே வாரணாசி நீதிமன்றம் இந்துக்கள் தொடுத்த வழக்கினை நிராகரித்திருந்தது.

  இருப்பினும், இந்த தீர்ப்பு தொடர்பான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த மாவட்ட நீதிமன்றமானது, இந்த வழக்கிற்கு கள ஆய்வு முக்கியம் எனக் கூறி, கள ஆய்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

  மாவட்ட நீதிமன்ற நீதிபதி அளித்த இந்த உத்தரவினை கண்டித்து அலகாபாத் உயர்நீதி மன்றம் தடையுத்தரவை பிறப்பித்தது. இந்த தடையுத்தரவு கடந்த 2020ம் ஆண்டு வரை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் கியான்வாபி பள்ளிவாசல் பகுதியில் இருந்த ஸ்ரிங்கர் கௌரி கோவிலுக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்று ஐந்து பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

  அவர்கள் தொடர்ந்த இந்த வழங்கினால் தான் இன்று கியான்வாபி பள்ளிவாசல் ஒரு பிரபலமான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வழக்கினை ஏற்ற வாரணாசி நீதிமன்றம், பள்ளிவாசலில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவினை மீண்டும் பிறப்பித்தது.

  காணொளி விவகாரம்..

  மேலும், இந்த மசூதியின் வசுக்கனா பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் வழக்கு தொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்த மசூதி தரப்பாளர்கள் அது ஒரு பழைய நீரூற்று மட்டுமே என்று கூறியிருந்தனர்.

  இந்த பகுதியினை ஆராய்ந்த அதிகாரிகள் நீரூற்றில் இருந்த தண்ணீர் முழுவதினையும் வெளியேற்றிவிட்டு பரிசோதித்தபோது சிவலிங்கம் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழுகைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நேற்று அந்த பள்ளிவாசலின் சுவர் பகுதிகளில் சூலம் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சுவரின் பல பகுதிகளில் இருந்த சூலச் சின்னம் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கு தொடுத்ததிலிருந்தே வாரணாசி பகுதியானது பரபரப்பான நிலைமையில் இருந்து வருகிறது.

  இந்த வழக்கு மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டினை குலைக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தவழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை நான்காம் தேதி நடைபெறும் என்றும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தொன்மையான சின்னங்கள் கியான்வாபி பள்ளிவாசலில் கிடைக்குமென்றால், 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

  சென்னையில் இடம்பெறுமா அப்துல்கலாம் சிலை? சென்னை மாநகராட்சியின் பதில் என்ன?

   

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....