Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இடம்பெறுமா அப்துல்கலாம் சிலை? சென்னை மாநகராட்சியின் பதில் என்ன?

    சென்னையில் இடம்பெறுமா அப்துல்கலாம் சிலை? சென்னை மாநகராட்சியின் பதில் என்ன?

    உலகின் அனைத்து பகுதிகளிலும் புகழ் பெற்ற ஒருவர் மறைந்த பிறகு அவரின் நினைவாக சிலை அமைப்பது என்பது பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. எனினும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும், நில ஒதுக்கீடுகளும் சில நேரங்களில் விவாதத்திற்கு வழிவகுக்கின்றன.

    சென்னையில் மூன்று தலைவர்களுக்கு சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அத்துடன், கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலைக்கு அருகில் இடமாற்றம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்திதுறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இதற்காக 1கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தனர்.

    ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கவும், காந்தி மண்டபத்தில் சென்னை மாகானத்தின் முன்னாள் முதலமைச்சர் பா சுப்பராயன் சிலை அமைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கவும் அனுமதி அளிக்ககோரி செய்தி மக்கள் தொடர்பு துறை துணைச் செயலாளர் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் 3 சிலைகளை வைக்க அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைத்ததற்கும், பத்மாவதி நகர் பிரதான சாலையை, ‘சின்ன கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்ததற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மெட்ரோ ரயில் சுரங்க பணிக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்து, கடற்கரையில் உள்ள ஔவையார் சிலை அருகே அமைக்கவும், ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.

    திடீரென உயர்ந்த தக்காளியின் விலை; அரங்கேறிய தக்காளி திருட்டு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....