Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்'பாஜக அவர்களின் அரசியலை செய்து வருகிறார்கள்' - கடம்பூர் ராஜூ!

  ‘பாஜக அவர்களின் அரசியலை செய்து வருகிறார்கள்’ – கடம்பூர் ராஜூ!

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நடைபெற்றது.

  இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது அவர் பேசியதாவது:

  “தமிழகம் வந்த பிரதமர் 21,000 ஆயிரம் கோடி ரூபாயில் ஆன பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். அவர் துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறிப்பாக சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் திட்டம்.

  பாரத பிரதமர் என்பவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்கு வருகை புரிவது வழக்கம். அதே போலத்தான் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும் உள்ளார் குறிப்பாக தற்போது பாரதப் பிரதமர் துவக்கி வைத்துள்ள திட்டங்கள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடபட்டவையே.

  சென்னை மதுரவாயல் பறக்கும் இரு வழி சாலை திட்டத்தை திமுக கொண்டுவந்தாலும் 2006 -11 காலகட்டங்களில் நில எடுப்பு பிரச்சினை காரணமாக அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவுற்று மதுரவாயல் துறைமுகம் பறக்கும் புறவழிச்சாலை திட்டத்திற்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2020 ல் அதற்கான பணி தொடங்க தான் தற்போது பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.

  தமிழகத்தில் உள்ளாட்சியில் நாளும் பொழுதும் பல்வேறு குளறுபடிகளாகத்தான் உள்ளது பத்திரிகை ஊடங்களை பார்த்தாலே தெரிகிறது. மக்களுக்கு வரிச்சுமை நிர்வாகச் சீர்கேடு இதற்கு உதாரணமாக கோவில்பட்டி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இது எல்லாமே நிர்வாகச் சீர்கேடு தான். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும்.

  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான 138 சாலைகள் இத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  அதிமுக இரட்டை தலைமையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எதுவாக இருந்தாலும் பொதுக்குழு தான் முடிவு செய்யும் பொதுக்குழு கூட்டமும் தற்போது அறிவிக்கப்படவில்லை தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைக்காக அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
  மேலும், சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்து மக்களின் எதிர்ப்பை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்து உள்ளோம்.

  குறிப்பாக தீப்பெட்டி தொழிலாளர்கள் பிரச்சனையாக இருந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசின் கவனத்தை ஈர்த்து எங்கள் கடமையை செய்து மாநில அரசு தன் கடமையைச் செய்யவில்லை. மாநிலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுகிறது அவர்கள் அவர்களது அரசியலை செய்து வருகின்றனர் இதில் எந்த ஒரு போட்டியும் இல்லை” எனக் கூறினார்.

  திடீரென உயர்ந்த தக்காளியின் விலை; அரங்கேறிய தக்காளி திருட்டு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....