இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளும், நான்கு ஆண்டு படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் – 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான 2022 – 2023-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் இன்று (செப்டம்பர்-12) காலை 10 மணி முதல் வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை; முந்துங்கள்…விண்ணப்பிக்க குறைவான நாட்களே உள்ளன