Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரி மெரினாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவுப்பாதை; அரசுக்கு கோரிக்கை வைக்கும் இரா.சிவா

    புதுச்சேரி மெரினாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவுப்பாதை; அரசுக்கு கோரிக்கை வைக்கும் இரா.சிவா

    புதுச்சேரி மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவுப்பாதையை அரசு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு அருகில் சென்று, கடற்கரை அழகை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவுப்பாதையை அமைத்து கொடுத்துள்ளார். ஆனால் புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை.

    வேலைவாய்ப்பில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் தரப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 3 சதவீதம் அறிவிக்கப்பட்டு, அதுவும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே புதுச்சேரியிலும் 4 சதவீதம் வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதுபோல் புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் காலத்தோடு தரப்படுவதில்லை. மாதாந்திர உதவித்தொகை 20 தேதிக்குமேல்தான் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டுள்ளது.

    எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5 தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் வீடு தேடிச் சென்று கூட அரிசியை வழங்கச் செய்யலாம். அரசுப்பள்ளிகளில் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் உள்ள சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுபோல் புதுச்சேரி மெரினாவிலும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வகையில் அவர்களுக்கான சரிவுப்பாதை அமைத்துத்தர வேண்டும். அப்போதுதான் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளும்கூட கடற்கரைக்கு அருகில் சென்று கடலை ரசிக்க முடியும்.

    அரசு வழங்கும் மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதத்தை வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும்வகையில் அவர்களுக்கான சிறப்புப்பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து செல்வதற்கு சரிவுப்பாதை பின்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் இயங்கவில்லை. இதனால் முதல்வர், அமைச்சர்களை சந்திக்கவரும் மாற்றுத்திறனாளிகள் சட்டசபை படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பின்பக்கம் செயல்படாமல் உள்ள அந்த சரிவுப்பாதையை, முன்பக்கம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் சுலபமாக முதல்வர், அமைச்சர்களை சந்திக்க வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி அரசு பெயரளவு மாற்றுத்திறனாளிகளுக்கான விழா கொண்டாடாமால், அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் குறித்த நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகள், சலுகைகள் அனைத்தையும் வழங்கிவிட முடியும். எனவே மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....