Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது!

    சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது!

    அமெரிக்காவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. 

    குடியரசுத் தின விழாவை முன்னிட்டு இந்த ஆண்டுகக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளும் சமீபத்தில் வழங்கப்பட்டன. இதனிடையே சுந்தர் பிச்சைக்கு இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. 

    இன்று அமெரிக்காவின் சான்ப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இதனை இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார். 

    இந்நிலையில், இது தொடர்பாக சுந்தர் பிச்சை, இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. 

    என் குடும்பத்தினர் இருக்கும் இந்த சமயத்தில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக இருக்கிறது. என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க ஆவலுடன் இருக்கிறேன். 

    பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உத்வேகம் ஆகும். அதனால், வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    குடியாத்தம் டூ நியூசிலாந்து…தங்கப்பதக்கம் வென்ற ஜெயமாருதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....