Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுராஜீவ் கொலை வழக்கு; 31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து நளினி உள்பட 6 பேர் விடுதலை!

    ராஜீவ் கொலை வழக்கு; 31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து நளினி உள்பட 6 பேர் விடுதலை!

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட ஆறு பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்த உத்தரவை அடுத்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெருரம்பத்தூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலமாக கொல்லப்பட்டார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் கடந்த 1998 ஆம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் முறையீடுகளின் அடிப்படையில் 19 பேர் விடுதலை செய்யப்பட, மீதமுள்ளவர்கள் முதலில் தூக்கு தண்டனை கைதிகளாக அறிவிக்கப்பட்டு ,பிறகு ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.

    இதனிடையே, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 32 ஆண்டுகள் கழித்து கடந்த மே 18 ஆம் தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். 

    இவரைத்தொடர்ந்து நளினி உட்பட 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கான விடுதலை கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இதற்கான முடிவு நேற்று வெளியானது. அதன்படி நளினி, முருகன், சாந்தன், ரவிசந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரும் ராஜீவகாந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. 

    இந்நிலையில், இன்று நளினி உட்பட 6 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர். 

    இதையும் படிங்கரெட் அலட்டுக்கு மேல் சீர்காழியில் இரண்டு மடங்கு மழை! இந்த நூற்றாண்டின் உச்சம் என வானிலை மையம் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....