Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கட்சி மாறாத ஐந்தாரு தலைவர்களில் நானும் ஒருவன்: விமர்சனங்களுக்கு பதிலடி தந்த அன்பழகன்

    கட்சி மாறாத ஐந்தாரு தலைவர்களில் நானும் ஒருவன்: விமர்சனங்களுக்கு பதிலடி தந்த அன்பழகன்

    புதுச்சேரியில் உள்ள தலைவர்களில் கட்சி மாறாத, ஐந்தாரு தலைவர்களில் நானும் ஒருவன் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

    புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

    கழக செயல்பாட்டை முடக்கி, கழகத்தை அழிக்க நினைக்கும் திமுகவின் சதி செயலுக்கு துணை நின்று, திமுகவிற்கு நட்ப்பாக செயல்படும் திரு. ஓபிஎஸ் அவர்களின் அனைத்து சதி செயல்களையும் முறியடித்து, கழகத்தையும், கழக தொண்டர்களையும் தாயுள்ளத்தோடு கட்டி காத்து வரும் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை குறைகூற கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகருக்கு எந்த அருகதையும் கிடையாது.

    நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கழகம் தோல்வியை அடைந்ததற்கு எடப்பாடியார் காரணம் என திரு. சேகர் கூறுகிறார். தோல்விக்கான காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும், கழகத்தில் இருந்து கொண்டே திமுகவிற்கு ஆதரவாக திரு. ஓபிஸ் அவர்கள் செயல்பட்டதன் விளைவுதான் கழக ஆட்சி ஏற்படாததற்கு காரணமாவார்.

    இதையும் படிங்க:தனது கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்த கமல் நடத்திய போட்டோ ஷூட் – வைரல் புகைப்படங்கள்

    கழகத்திற்கு வந்த குறுகிய நாட்களிளேயே மேற்கு மாநில செயலாளர் என்ற பதவியை உங்களுக்கு அளித்த மரியாதைக்குரிய எடப்பாடியாரை விமர்சிக்கும் குறைந்த பட்ச தகுதி கூட உங்களுக்கு இல்லை.

    நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எடப்பாடியாரிடம் மண்டியிட்டு, உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழுது, புலம்பி, போட்டியிட பணமும் பெற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றதை மறந்துவிட்டு எங்களது இடைக்காலப் பொதுச் செயலாளரை விமர்சனம் செய்கிறார். போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியில் வெறும் 1600 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்த திரு.சேகருக்கு மற்றவர்களை குறை கூற எந்த தார்மீக உரிமையும் இல்லை.

    புதுச்சேரி முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திரு நாராயணசாமியை நான் விமர்சித்தவுடன் என் ஆர் அவர்களின் பி டீ மாக நான் செயல்படுவதாக திரு சேகர் கூறுகிறார்.

    ஓராண்டு காலம் திரு. ரங்கசாமி அவர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டு, 1000-கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்த அரியூர் சர்க்கரை ஆலை இடத்தை பிளாப் போட்டு விட்டு தற்போது நாராயணசாமிக்கு ஆதரவாக திரு ரங்கசாமி அவர்களை ஏன் சேகர் அவர்கள் எதிர்கிறார்.

    இதையும் படிங்க: 6 பேர் விடுதலை வருத்தமளிக்கிறது..! காங்கிரஸ் முக்கிய தலைவரின் கருத்தால் பரபரப்பு

    எங்கள் கூட்டணியின் முதலமைச்சருக்காக நாள் பேசுவது தவறு என்றால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வருக்காக சேகர் அவர்கள் வக்காலத்து வாங்கி காங்கிரஸ் கட்சியின் பி டீ மாக செயல்படுவது ஏன்? எனக்கு பதில் கூற காங்கிரஸ் கட்சியில் யாரும் இல்லையா? நீங்கள் என்ன காங்கிரஸ் கட்சிக்கு ஏஜெண்டா?

    30 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு, புதுச்சேரி மாநில கழக தொண்டர்களுக்காக தலைமை கழகத்தை வாங்கிக் கொடுத்தார். அந்த தலைமை கழகத்தைப் பற்றி குறைகூற நீங்கள் யார்? அப்போது நீங்கள் எந்த மாநிலத்தில் எந்த கட்சியில் இருந்தீர்கள்? அதிமுகவிற்கும் உங்களுக்கும் அப்போது எந்த சம்பந்தமாவது உண்டா?

    கடந்த 2006-ஆம் ஆண்டு பிஜேபில் இருந்த இவரை முதல் நாள் கழகத்தில் சேர்த்து மறுநாள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது யார் என்று அனைவரும் நன்கறிவர். தற்போது என்னை குறைகூறும் இதே நபர் தான் என்னுடைய அரசியல் ஆசான் இவர் என்றும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அடுத்தபடியாக என்னை வைத்து பார்ப்பதாகவும் பொது மேடையில் பேசியது மக்களை ஏமாற்றவா?

    பேட்டியளிக்கும் போது தலைமைப் பண்புடன் கண்ணியத்துடன் பேசவேண்டும். ஒருமையில் வா, போ, நீ. உன்னை, போடா என பேட்டை ரவுடி போல பேசுவதை விட்டு விட்டு அரசியல் ரீதியில் மரியாதையுடன் பேசும் தகுதியை தாங்கள் வளர்த்துக் கொள்வது நல்லது.

    கட்சி மாற இவரை அழைத்ததாக நல்ல ஜோக்கை சேகர் கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள தலைவர்களில் கட்சி மாறாத, ஐந்தாரு தலைவர்களில் நானும் ஒருவன். புரட்சித் தலைவரால் இந்த இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் பல்வேறு பொறுப்புகள் பெற்று, மரியாதைக்குரிய எடப்பாடியார் அவர்கள் தலைமையில் தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாக கழகப் பணியாற்றி வரும் எனக்கு நான் சார்ந்துள்ள கழகமே சொத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாராமன், மாநில துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன்உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துகேணி பாஸ்கரன், மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், உழவர்கரை நகர கழக செயலாளர் சித்தானந்தம், உழவர்கரை தொகுதி செயலாளர் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழக்கடை சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதையும் படிங்கசெய்நன்றி மறந்துவிட்டார் அன்பழகன்.. ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஓம்சக்தி சேகர் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....