Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை - செந்தில் பாலாஜி தகவல்

    தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை – செந்தில் பாலாஜி தகவல்

    தமிழகத்தில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

    சென்னையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் சுமை கண்காணிப்பு மையத்திற்கு சென்று  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். 

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 

    சென்னையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் பழுதடைந்த மின் இணைப்புகளும் சரி செய்யப்பட்டு, உடனடியாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கடந்த காலங்களில் மழை வருகிரியாது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி விடுவார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

    மழைக்கால சிறப்பு பணிக்காக 11 ஆயிரம் பணியாளர்கள் களப்பணியாற்றி வருவதாகவும், 1,040 பணியாளர்கள் பகலிலும் 600 பணியாளர்கள் இரவிலும் பணிபுரிந்து சிறப்பு கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    மேலும் சென்னையில் பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 

    மழை காரண,ஆகா மின் தேவை குறைந்துள்ளது எனவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....