Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஊராட்சி பணியாளர் காலை சுற்றிய 9 அடி நீள மலைப்பாம்பு

    ஊராட்சி பணியாளர் காலை சுற்றிய 9 அடி நீள மலைப்பாம்பு

    ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் ஊராட்சி பணியாளரின் காலை சுற்றிக்கொண்டு பாம்பை வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். 

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசித்து வருபவர் சங்கர் ஆவார். இவர் ஊராட்சி பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட சங்கர், அந்தப் பாம்பை விரட்டுவதற்காக சென்றார். அப்போது அந்தப் பாம்பு அவரது கால்களை சுற்றிக்கொண்டது.

    இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து, உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் சங்கரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, சங்கரின் காலினை சுற்றியிருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை மீட்டனர்.

    இதையடுத்து, அந்த மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடரும் காதல் கொலைகள்! லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....