Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாஜக தனது ஆட்சிக் காலத்தில் எந்தவித பணியையும் செய்யவில்லை-முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    பாஜக தனது ஆட்சிக் காலத்தில் எந்தவித பணியையும் செய்யவில்லை-முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    பாஜக தனது ஆட்சிக் காலத்தில் எந்தவித பணியையும் செய்யவில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

    தில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7 ஆம் தேதி நடத்தப்படுகிறது. வாக்கு சேகரிப்பில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டு கொண்டுள்ளனர். 

    இந்நிலையில், புது தில்லியில் உள்ள மல்கா கஞ்ச் என்ற பகுதியில் கெஜ்ரிவால் தலைமையில் சாலை பேரணி நடைபெற்றது. 

    இது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநகராட்சித் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவும் செய்யாத காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அவர்களிடைம் கேட்டால், அவர்களுக்கு ஒரே சாக்கு கெஜ்ரிவால் நிதி கொடுக்கவில்லை என்று கூறுவது தான் என்றும் தெரிவித்தார். 

    மேலும் தில்லி அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கியதாகவும், பாஜகவினர் உங்களிடம் (மக்கள்) ஓட்டு கேட்டால், ஒரு லட்சம் கோடியை என்ன செய்தீர்கள் என கேட்கும்படி கெஜ்ரிவால் கூறினார். 

    அதே சமயம் ஆம் ஆத்மீ அரசு பள்ளிகளை உருவாக்கி இருப்பதாகவும், இலவச மின்சாரத்தை உறுதி செய்திருப்பதாகவும், சிறப்பான மொஹல்லா மருத்துவ விடுதிகளை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாநகராட்சி தேர்தலில் ஒரு வாய்ப்பளித்தால், நகரின் குப்பைகளை சுத்தம் செய்யோம் என்றும் கூறினார். 

    ஒரே பொருள்தான் ஆனா கஸ்டமர்ஸ பொறுத்து விலை மாறும்; இதென்ன புது டெக்னிக்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....