Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுத்தாண்டிற்காக புதுப்பொலிவு பெற்றுள்ள புதுச்சேரி மதுபான கடைகள்...

    புத்தாண்டிற்காக புதுப்பொலிவு பெற்றுள்ள புதுச்சேரி மதுபான கடைகள்…

    புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி வெளிநாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விதவிதமான மதுவகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதி புதுச்சேரி. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுச்சேரி நோக்கி இழுக்கிறது.

    இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபான கடைகள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன. உள் அமைப்புகள் மின்னொலியில் ஜொலிக்கின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மதுவகைகள் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஜப்பானில் இருந்து விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயன், இத்தாலி பீர், நியூ யார்க் ஓட்கா மற்றும் கோவா ப்பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி காத்திருந்து மதுபிரியர்களை வரவேற்று வருகிறது.

    மது வகைகளுக்கு ஏற்ப சைடிஷ்களும் புது விதமாக தயாராகியுள்ளன. கடற்கரையையொட்டிய பகுதியாக புதுச்சேரி இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகளை சிறப்பு சலுகைகளுடன் வழங்க தயாராகி வருகிறது.

    புதுச்சேரியில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து களத்தில் இறக்கப்பட்டுள்ள மேலும், 50 மதுவகைகள் களமிறக்கப்பட்டுள்ளது.

    வருகின்ற புத்தாண்டை ஒட்டி மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து நட்சத்திர ஹோட்டல்களும் ரெஸ்டாரண்டுகளும் மற்றும் அனைத்து ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெளிவரப்போகும் துணிவு டிரெய்லர்; குஷியில் அஜித் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....