Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவரப்போகும் துணிவு டிரெய்லர்; குஷியில் அஜித் ரசிகர்கள்

    வெளிவரப்போகும் துணிவு டிரெய்லர்; குஷியில் அஜித் ரசிகர்கள்

    அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு ரெடியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்குமார்- எச்.வினோத் கூட்டணி-போனி கபூர் இணைவதால் துணிவு திரைப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு என்பது அதிகளவில் உள்ளது. 

    துணிவு திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து, மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், துணிவு திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுகங்கள் நேற்று நிகழ்ந்தது. ஆனால், அஜித்குமாரின் கதாப்பாத்திரத்தின் பெயரை மட்டும் படக்குழு அறிவிக்கவில்லை. 

    இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    துணிவு திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் அனுமதி இல்லை – காவல்துறை உத்தரவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....