Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் அனுமதி இல்லை - காவல்துறை உத்தரவு..

    புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் அனுமதி இல்லை – காவல்துறை உத்தரவு..

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை பகுதி சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    2023 ஆங்கில புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் புத்தாண்டை முன்னிட்டு புதுவை நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

    இது குறித்து போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அவர்கள் பேசியதாவது;

    புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை வரை கடற்கரை சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையையொட்டிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாடத்திற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்களை முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நிறுத்த வேண்டும்.

    அதேபோல் உப்பளம், மறைமலை அடிகள் சாலையில் வரும் வாகனங்கள் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும். பெத்திசெமினார் பள்ளியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்த வேண்டும்.

    அங்கிருந்து கடற்கரைக்கு செல்வதற்கு பி.ஆர்.டி.சி. பஸ்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளது. மேலும் புத்தாண்டையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு முடிந்து மக்கள் பாதுகாப்பாக செல்ல முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பார்கள்.

    அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சி நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டல்கள் உள்ளன. இதனால் புத்தாண்டு அன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது கொரோனா பரவல் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    300 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....