Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்என்ன ஒரு கொடுமை! அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்., காரணம் தெரியுமா?

    என்ன ஒரு கொடுமை! அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்., காரணம் தெரியுமா?

    புதுச்சேரி கிராமப்பகுதியில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட நிலத்தில் தூவப்பட்டிருந்த விஷம் கலந்த நெல்லை மயில்கள், பறவைகள் தின்றதால் 2 மயில்கள், பல கோழிகள், பறவைகள் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (64). இவர் தனக்கு சொந்தமான இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரில் மயில்கள் வருவதால் அதை கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் முனுசாமி விஷம் கலந்த நெல்லை விவசாய நிலத்தில் தூவி வைத்ததாக தெரிகிறது. அதை தின்ற மயில்களில் இரண்டு மயில்கள், நான்கு கோழிகள், ஒரு காகம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டன. அதில் ஒரு மயில் ஆபத்தான நிலையில் வனத்துறை வசம் உள்ளது.

    மேலும் விஷம் கலந்த நெல்லை தின்ற பல மயில்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் இறந்து கிடக்கின்றன. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி வனத்துறையினர் மூன்று மயில்களை மட்டுமே கைப்பற்றி எடுத்து சென்றனர். சுற்று வட்டாரத்தில் இறந்து கிடந்த மயில்களையும், கோழிகளையும், காகங்களையும் எடுத்து செல்லவில்லை.

    இந்திய தேசிய பறவையான மயில்களை உணவில் விஷம் வைத்து கொன்ற முனுசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....