Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாண்டஸ் புயல் எதிரோலி; ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு..

    மாண்டஸ் புயல் எதிரோலி; ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு..

    டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த ஊரக திறனாய்வுத் தேர்வானது டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு துறை அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி உதவி தொகை வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில், இந்த திறனாய்வு தேர்வானது வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்வு துறை அறிவித்தது. அதன்படியே, மாணவ, மாணவிகளும் தேர்வுக்கு தயராகினர். 96 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

    இதைத்தொடர்ந்து, டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த ஊரக திறனாய்வுத் தேர்வானது டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு துறை அறிவித்துள்ளது. 

    மாண்டஸ் புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது தெரியுமா? தீவிரம் இனிமேதான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....