Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதி; பாமக நிறுவனர் கண்டனம்

    தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதி; பாமக நிறுவனர் கண்டனம்

    சென்னை: “பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் பேராசிரியர்களை கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத, பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான முதல் இரு பருவங்களில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

    இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது, தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும். பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

    அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும். தமிழ்ப் பாடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய திட்டங்கள் மூலம் பொறியியல் மாணவர்களின் தமிழறிவை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....