Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாண்டஸ் புயல் எச்சரிக்கை! சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை! சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

    வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் எச்சரிக்கையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டத்தில் இந்திய வானிலை மைய விமான நிலைய குடிங்கரி வி.ஆர். துரை, விமான நிலைய செயல்பாடுகள் பிரிவு பொதுமேலாளர் எஸ்.எஸ்.ராஜு உள்பட பல அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புடை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

    இந்தக் கூட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்க தீர்மானம் செய்யப்பட்டது. 

    அதன்படி சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல் மற்றும் கடுமையான கடல் சீற்ற காலநிலையில் நகராதவாறு, தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    பலத்த காற்று காரணாமாக செயல்பாடுகள் இடை நிறுத்தப்பட்டால், விமானங்களை நிறுத்த எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விமான நிலைய உணவு கூடங்களில் போதுமான பொருட்களை அடுக்கி வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதி; பாமக நிறுவனர் கண்டனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....